நாகர்கோவில் புன்னைமூடு அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம்
Views - 46 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,நாகர்கோவில் கோட்டார் சக்திநகரில் புன்னைமூடு அம்மன், சிவசுடலை, நீலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருஷாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து வேல்காவடி கொடை விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது.திருவிழாவின் முதல் நாளன்று உஷபூஜை, தீபாராதனை, திருவிளக்கு பூஜை, குடியழைப்பும், 2-ம் நாளான நேற்று காலை கணபதி ஹோமம், தொடர்ந்து காவடி ஊர்வலம் நடந்தது. பறக்கும் காவடி, தொட்டில் காவடி, சூரிய காவடி, தேர் காவடி, மயில் காவடி, 108 வேல் காவடி உள்ளிட்ட காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். வேல்குத்துதல், பஜனை பாடலுடன் பால்குட பவனியும் நடைபெற்றது.பகலில் உச்சி கால பூஜை, இரவில் சாமிக்கு அலங்கார பூஜை, பெரிய படுக்கை, ஊட்டு பூஜை, வாண வேடிக்கை போன்றவை நடந்தன. 3-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் பொங்கல் வழிபாடு, மதியம் சமபந்தி விருந்து, மாலையில் பூப்படைப்பு மற்றும் ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.News