ரூ.2 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் ஆபாசமாக படத்தை வெளியிட்டு மிரட்டல் காதலனின் தாயார் கைது
Views - 42 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலனியை சேர்ந்தவர் கில்டா (வயது44). இவருடைய மகன் மவ்ரஸ். இவருக்கும், 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மவ்ரஸ், மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில், மவ்ரசின் தாயார் கில்டா, அந்த மாணவியின் தாயாரிடம் இருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆன பின்பும் கடனை திரும்ப கொடுக்கவில்லை.
எனவே, மாணவியின் தாயார், கில்டாவிடம் கடனை திரும்ப தரும்படி கேட்டார். பணத்தை திரும்ப கொடுக்க மறுத்த கில்டா இதுபற்றி மகன் மவ்ரசிடம் தெரிவித்தார்.
அவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதோடு, மாணவியின் படத்தை ஆபாசமாக சமூகவலைத்தளத்தில் வெளியிடுவேன் எனக்கூறியுள்ளார். வெளிநாட்டுக்கு செல்லும் முன்பு மாணவியுடன் செல்போனில் எடுத்துக்கொண்ட படங்களை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாகவும் தெரியவருகிறது. இதற்கு அந்த வாலிபரின் தாயார் கில்டா, சகோதரர் பிஜோ ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். அவர்,இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் வாலிபர் மவ்ரஸ், அவருடைய தாயார் கில்டா, சகோதரர் பிஜோ ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கில்டா கைது செய்யப்பட்டார்.News