விடிய- விடிய மழை: நள்ளிரவில் மரம் விழுந்து 2 வீடுகள் இடிந்தன
Views - 49 Likes - 0 Liked
-
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆறு, குளம், அணை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.
குலசேகரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய- விடிய கன மழை பெய்தது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மிகவும் பழமையான ராட்சத மரங்கள் உள்ளன. மேலும், இந்த ஆஸ்பத்திரி காம்பவுண்டு சுவரையொட்டி ஏராளமான வீடுகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் பெய்த மழையில், ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற ஒரு மரம் முறிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. இதில், ஜெரால்டு, அவரது சகோதரர் ஜான் கிறிஸ்டோபர் ஆகியோரது வீட்டின் கூரை மற்றும் பின் பகுதி இடிந்து சேதம் அடைந்தது. அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இதனால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
மேலும், முறிந்து விழுந்த மரத்தின் கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.News