" “No matter how hard the past, you can always begin again.”"

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

Views - 73     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி,

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு, கடலில் நீராடி மகிழ்வார்கள். 

    கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இந்த மழை விடிய– விடிய நீடித்தது. நேற்று காலையில் கன்னியாகுமரியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியை கண்டு ரசிப்பதற்காக காத்திருந்த சுற்றுலா பயணிகள் அந்த காட்சியை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல படகு துறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

    இந்தநிலையில், நேற்று காலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்தன. முக்கடல் சங்கமத்தில் ராட்சத அலைகள் எழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதபடி கண்காணித்தனர்.

    கடல்சீற்றம் காரணமாக, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பகல் 11 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதே நேரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    News