இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது
Views - 57 Likes - 0 Liked
-
புதுடெல்லிஇந்தியா உள்பட, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக சர்வதேச சீன செய்தி ஊடகம் தெரிவித்து உள்ளது.சவுத் சீன மார்னிங் போஸ்ட் நாடு முழுவதும் பணத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் சமீபத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. சீனா பணத்தாள் அச்சகம் மற்றும் மினிங் கார்ப்பரேஷனின் பல ஆதாரங்களை மேற்கோளிட்டு, இந்த பிளாண்ட் இருப்பதாக அறிக்கை தெரிவித்து உள்ளது. "இந்த ஆண்டு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட அசாதாரணமான உயர் ஒதுக்கீட்டை பூர்த்தி செய்வதற்கு முழுத் திறமையுடன் இயங்கும் என கூறி உள்ளதுசீன வங்கி மற்றும் அச்சிடும் அச்சக இயக்கத்தின் தலைவர், ஜின்ஸெங்கின் வெளியிட்டு கட்டுரை ஒன்றில் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், தாய்லாந்தில், வங்காளம், இலங்கை, மலேசியா, இந்தியா, பிரேசில் மற்றும் போலந்து உட்பட நாடுகளின் நாணய உற்பத்தி திட்டங்களுக்கு "வெற்றிகரமாக ஒப்பந்தங்களை" நிறுவனம் பெற்றது. என குறிப்பிட்டு உள்ளார்.இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகள் சீனா அச்சிடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசாங்கம் முற்றிலும் மறுத்துத்துள்ளது. இது குறித்து மத்திய பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்த்ர கார்க் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. இந்திய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவிலேயே அச்சடிக்கப்படுகின்றன” எனக் கூறினார்.இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சந்தா கூறுகையில், ”இந்திய ரூபாய் சீனாவில் அச்சிடப்பட்டால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். பொருளாதார பிரச்சனையும் ஏற்படும். இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக சீன தினசரி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறித்து இந்திய அரசாங்கம் தெளிவான தகவலை வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.News