தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது
Views - 223 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இதே போல ஏராளமான மாணவ-மாணவிகளும் வெளி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தங்கி படிக்கிறார்கள். இந்த நிலையில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் வெளியூர்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.நேற்றுடன் விடுமுறை முடிவடைந்ததால் அனைவரும் மீண்டும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதற்காக ஏராளமானோர் வடசேரி பஸ் நிலையத்தில் திரண்டதால் பஸ் நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.
இதை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது சென்னைக்கு- 15 பஸ்களும், மதுரைக்கு 50 பஸ்களும், கோவைக்கு 10 பஸ்களும், திருச்சிக்கு 5 பஸ்களும் இயக்கப்பட்டது. இது போல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து சென்னைக்கு 5 பஸ்களும், பெங்களூருவுக்கு 2 பஸ்களும், கோவைக்கு ஒரு பஸ்சும் இயக்கப்பட்டன. மொத்தம் நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு 88 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களிலுமே கூட்டம் அதிகமாக இருந்தது.News