தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
Views - 56 Likes - 0 Liked
-
தாம்பரம்,
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பஸ்களுக்கான சிறப்பு முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த சிறப்பு முன்பதிவு மையத்தில் நேற்று குறைந்த அளவு பயணிகளே முன்பதிவு செய்தனர். பெரும்பாலான டீலக்ஸ் பஸ்களில் ஆன்-லைனில் பயணிகள் முன்பதிவு செய்துவிட்டதால் சானடோரியத்தில் உள்ள சிறப்பு முன்பதிவு மையத்தில் குறைந்த அளவு பயணிகளே முன்பதிவு செய்தனர்.
தீபாவளி சிறப்பு பஸ்கள் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிமுதல் இயக்கப்படுகிறது.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பஸ்கள் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இதற்காக பஸ் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.News