நாகர்கோவிலில், இன்று ஜெயலலிதா நினைவுதின மவுன ஊர்வலம் மாவட்ட செயலாளர் அறிக்கை
Views - 69 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில், இன்று ஜெயலலிதா நினைவுதின மவுன ஊர்வலம் நடக்கிறது என்று குமரி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கூறியுள்ளார்.
பதிவு: டிசம்பர் 05, 2018 04:00 AM
நாகர்கோவில்,முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. எனவே இன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவிலில் மவுன ஊர்வலம் நடக்கிறது.
ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு வேப்பமூடு சந்திப்பு நகராட்சி பூங்கா முன்பு நிறைவடையும். அங்கு ஜெயலலிதாவின் உருவபடத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
ஊர்வலத்துக்கு நான் (எஸ்.ஏ.அசோகன்) தலைமை தாங்குகிறேன். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அனைத்து நகர, பேரூர் மற்றும் கிளைகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News