5 மாநில தேர்தலில் தோல்வி: பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி
Views - 71 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பா.ஜனதாவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன் வந்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா 5 ஆண்டு ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.News