மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Views - 68 Likes - 0 Liked
-
மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவில்,
பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்பெல்லாம் பணம் கொடுப்பது கிடையாது. பொருட்கள் மட்டும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது பல மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் ஒகி புயலால் பாதிக்கப்பட்டது. இப்படி பலவிதமான பாதிப்புகளுக்கு மக்கள் ஆளானதால், சாதாரண ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவித கொண்டாட்டங்களும் இல்லாமல் போய்விடக்கூடாது. வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பை மறக்க வைக்கக்கூடிய வகையில் இந்த பொங்கல் விழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கருதியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் சொன்னார்கள்.News