" “If opportunity doesn't knock, build a door.”"

ராஜீவ்காந்தி கொலை வழக்கு:7 பேரை விடுதலை செய்வதற்கு கவர்னர் தயங்குவது ஏன்?அற்புதம்மாள் கேள்வி

Views - 225     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்பு தமிழக கவர்னரிடம் சென்றதும், அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் 5 மாதம் கடந்த பின்னரும் கவர்னர் இன்னமும் கையொப்பம் இடாமல் இருக்கிறார். ஜனநாயக முறைப்படி சட்டத்தின் அடிப்படையில் அவர்களது விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
     
    கவர்னர் கையொப்பமிடாமல் இருப்பது சட்டத்தை மீறிய செயல். இது அரசியல் காரணங்களுக்காக நடக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தொடர்ந்து கவர்னர் மவுனம் சாதித்தால் மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
     
    சட்டப்படிதான் எனது மகன் உள்ளிட்ட 7 பேருக்கும் விடுதலை கேட்கிறேன். கவர்னர் ஏன் தயங்க வேண்டும்? எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற ஒரு பிரசாரம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டத்தான் இந்த ஒருங்கிணைப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், சட்டமும் சொல்லியிருப்பதால் எப்படியும் கவர்னர் கையெழுத்து போடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நடிகர் சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட வழக்கிலும் எனது மகன் சம்பந்தப்பட்ட வழக்கிலும் சட்ட முரண்பாடுகள் உள்ளது.
     
    இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.
     
    பின்னர், 7 பேர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஜான்சலின் சேவியர், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நீதியரசர், தெற்கு எழுத்தாளர் இயக்க நிர்வாகி திருத்தமிழ்த்தேவனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அற்புதம்மாள் சிறப்புரையாற்றினார்.
    News