" Work hard, stay humble, and follow your heart."

குமரிக்கு 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Views - 100     Likes - 0     Liked


  • அழகப்பபுரம், 

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அதாவது சுசீந்திரத்தில் தொடங்கி தேரூர், குலசேகரன்புதூர், ஆதலவிளை, ஆண்டார்குளம், தேவகுளம், நல்லூர், மருங்கூர் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் சுசீந்திரம் கற்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், சந்துரு, கிருஷ்ணகுமார், விக்ரமன், பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, கணேசன், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

    முன்னதாக மருங்கூர் வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சரவெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால் குமரி மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை செயல்படுத்த 3 ஆண்டுகள் ஆகும். அதற்காகத்தான் உங்கள் ஆதரவை கேட்டு இங்கு வந்துள் ளேன். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் அமைக்க வேண்டும்.

    ஆனால் துறைமுகத்தை அமைக்கவிட மாட்டேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் கூறுகிறார். நான் எந்த நிலையில் இருந்தாலும் இந்த மாவட்டத்தில் தான் இருப்பேன். வேறு எங்கும் ஓடிவிட மாட்டேன். என்னுடைய நிரந்தர முகவரி இந்த மாவட்டம் தான். நான் என்றும் குமரி மாவட்ட மக்களுக்கு வேலைக்காரனாக இருப்பேன். முதலாளியாக இருக்க மாட்டேன். ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை குமரி மாவட்டத்துக்கு தந்து உள்ளேன். நான் சாதி, மதம் பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் நான் ஒரு வேலைக்காரன் தான். எனவே இந்த தேர்தலில் மீண்டும் உங்கள் ஆதரவை கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    News