குமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் வீடு உள்பட 3 இடங்களில் திருட்டு
Views - 286 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,ஈத்தாமொழி அருகே மங்காவிளை பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன், தொழிலாளி. இவருடைய மனைவி பிரபாவதி(வயது 48). செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பிரபாவதி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து ஊரில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறதுபின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம், பித்தளை குத்து விளக்கு, வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்று உள்ளனர்.இதுகுறித்து பிரபாவதி ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.திருவட்டார் அருகே மண்விளை பறவக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 42). இவர் புதுடெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் சந்திரகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விடுமுறையில் ஊர் திரும்பிய ஜாண்சன், பிள்ளைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு மனைவியை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்றார்.நேற்று முன்தினம் உறவினர்கள், ஜாண்சன் வீட்டுக்கு சென்றனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜாண்சன் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், வீட்டில் இருந்த டி.வி., பீரோவில் இருந்த 1 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிவந்தது.திருவட்டார் அருகே முளவிளை குழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின்(42). இவரது கடையின் பூட்டை உடைத்து மேஜையில் வைத்திருந்த ரூ.32 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.பின்னர், இதுகுறித்து ஜாண்சன், ஸ்டாலின் ஆகியோர் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.News