குமரி மாவட்டத்தில் மழை, குழித்துறையில் 21.2 மி.மீ பதிவு
Views - 78 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை வெயில் இருந்தது. பகல் 12 மணி அளவில் திடீரென்று வெயில் குறைந்து வானம் இருண்டு, மேகங்கள் திரண்டன. மழை பெய்யும் என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி மாலை 4.30 மணி அளவில் மழை பெய்தது.குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை உள்ள 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 21.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-பூதப்பாண்டி- 19.2 மி.மீ, பேச்சிப்பாறை- 18.8 மி.மீ, சிற்றார் 1- 9.6 மி.மீ, சிற்றார் 2- 4 மி.மீ, சுருளோடு- 4.2 மி.மீ, தக்கலை- 3 மி.மீ, மாம்பழத்துறையாறு- 7 மி.மீ, அடையாமடை- 3 மி.மீ, ஆனைக்கிடங்கு- 7.2 மி.மீ, பெருஞ்சாணி- 1 மி.மீ மற்றும் புத்தன்அணை- 1 மி.மீ என மழை பதிவானது.மார்த்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் விரிகோடு பகுதியில் மின்னல் தாக்கி பல வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்ற மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.News