இந்திய அணி பெற்ற வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்..!
Views - 68 Likes - 0 Liked
-
புதுடெல்லி,உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகமே ஆர்வத்தோடு எதிர்பார்த்த இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வெர்த் லீவிஸ் விதிகளின் படி ஓவர்கள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று இரவு முதல் நாடு முழுவதும் பல இடங்களில் இந்திய ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் கூடிய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.நாக்பூர், லக்னோ, பெங்களூரு, கான்பூர், மும்பை, மத்தியப் பிரதேசம், சில்குரி உள்ளிட்ட இடங்களிலும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலும் இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.News