நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Views - 72 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாதம்தோறும் 1–ந் தேதி அன்று பென்ஷன் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 7–வது ஊதிய குழு பரிந்துரையை ஓய்வு பெற்றவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ஆதித்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் சைமன், இணைச்செயலாளர் சவுந்தர் ராஜன், துணை செயலாளர் மரியதாஸ், செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.News