" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு

Views - 100     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்டத்தில் நடைபெறும் திட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த்்் வடநேரே தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளிடமும், மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

    முந்தைய ஆலோசனை கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்த கலெக்டர், அதை செயல்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்கினார். மேலும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தரமானதாகவும் இருக்க வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமெனவும், பழுதடைந்த சாலைகளை துரிதமாக செப்பனிடவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளையும், பழுதடைந்த மின்சார கம்பி மற்றும் குடிநீர் குழாய்களையும் சரி செய்து பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டுமெனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். வளர்ச்சித்திட்ட பணிகளை செயல்படுத்துவதில் இடையூறு ஏதும் இருந்தால் எனது(கலெக்டர்) கவனத்துக்கு கொண்டுவந்து திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கலெக்டர் அலுவலகத்திலிருந்து வாட்டர்டேங்க் ரோடு வழியாக பேலஸ்ரோடு வரை பாதாள சாக்கடை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் கட்டிட பராமரிப்பு பணிகளை மழைக்காலத்தை முன்னிட்டு விரைந்து முடிக்க வேண்டும் எனவும்அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), சரண்யாஅரி (பத்மநாபபுரம்), ஐ.ஆர்.எஸ். அதிகாரி எழிலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வளம்- கட்டிடம்), குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    News