இந்திய பொருளாதாரத்தை சிதைத்த மோடி : ராகுல்
Views - 282 Likes - 0 Liked
-
கேரளாவையும், கர்நாடகாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை 766 ல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேதரி நகரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வயநாடு எம்.பி.,யான ராகுல், இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய ராகுல், தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன. இந்த தடையால் கேரளா- கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் சட்ட நிபுணர்கள் குழுவுடன் இது பற்றி பேசி உள்ளேன். விரைவில் இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும். இது தொடர்பாக பார்லி.,லும் குரல் எழுப்புவேன்.இந்தியாவின் மிகப் பெரிய பலமே அதன் பொருளாதாரம் தான். அந்த பொருளாதாரத்தை சிதைத்தது மோடியும், பா.ஜ.,வும் தான். எதற்காக இதை செய்தார் என்பதற்கு அவர் பதிலளித்தே தீர வேண்டும். நாட்டில் எதற்காக மிகப் பெரிய அளவில் வேலையிழப்பு மற்றும் வேலையில்லாத நிலையை உருவாக்கினார்? இதை நடத்துவதால் மோடிக்கு என்ன கிடைக்கிறது என்பது தான் மிகப் பெரிய விவாதமாக உள்ளது என்றார்.
News