கல்லூரி பேருந்து மோதி 7 மாணவர்கள் படுகாயம்
Views - 86 Likes - 0 Liked
-
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி மாணவ மாணவிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தைச் சேர்ந்த 10 பள்ளி மாணவிகள், சித்தளி பிரிவு அருகே, குன்னம் அரசு பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரமாக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான மூன்று பேருந்துகள் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக வந்தன. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் நின்றிருந்த மாணவ மாணவிகள் மீது மோதியது.
இதில் மாணவி காயத்ரி உட்பட 7 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி காயத்ரி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான பேருந்தை சிறை பிடித்த மக்கள், பேருந்தை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுNews