தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சீமானுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
Views - 79 Likes - 0 Liked
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரித்து வரும் சீமானுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.தூத்துக்குடி,தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்இந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.நாளை துவங்க உள்ள 15- ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.News