தென்ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது: கடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
Views - 84 Likes - 0 Liked
-
ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 497 ரன்களில் ‘டிக்ளேர்’ செய்து மலைக்க வைத்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்களில் முடங்கி ‘பாலோ-ஆன்’ ஆனது. 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. அதாவது ஒரே நாளில் தென்ஆப்பிரிக்கா 16 விக்கெட்டுகளை பறிகொடுத்து முற்றிலும் நிலைகுலைந்து போனது. டி புருன் 30 ரன்களுடனும், அன்ரிச் நார்ஜே 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
News