விசைப்படகில் என்ஜின் பழுதானதால் குமரி மீனவர்கள் உள்பட 11 பேர் கோவா கடலில் தத்தளிப்பு
Views - 95 Likes - 0 Liked
-
கருங்கல்,
குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ராபின்சன், அனீஷ், நீரோடிதுறையை சேர்ந்த கேபின், குமார், அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன், அசோக் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் உள்பட 11 மீனவர்கள் கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மேரிமாதா-1 என்ற விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோவாவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் மீனவர்கள் அனைவரும் அருகில் உள்ள துறைமுகங்களில் கரைசேரும் படி அறிவுறுத்தப்பட்டது. உடனே, மேரிமாதா-1 விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 11 மீனவர்கள் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.என்ஜின் பழுது
அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களது விசைப்படகின் என்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் நின்றது. இதனால், 11 மீனவர்களும் கோவா கடல் பகுதியில் சுமார் 35 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மீனவர்களை விரைவில் மீட்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில், தமிழக, கேரள அரசுகளுக்கும், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.News