தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மர்ம நபர்களை தேடும் போலீசார்
Views - 312 Likes - 0 Liked
-
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை,தஞ்சையில் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைந்து உள்ளது. உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர். இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி அந்த பகுதியில் இருப்போர் அளித்த தகவலின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அவர்கள் தேடி வருகின்றனர். பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டில் மேற்கொண்டு வரும் 3 நாள் சுற்றுப்பயணத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியர்கள் மத்தியில் பேசிய நிலையில், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது தஞ்சாவூர் பகுதியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.News