தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Views - 336 Likes - 0 Liked
-
நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம் அதன் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னைதமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. இதன் மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி. தொடர்ந்து முதல் -அமைச்சர் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.News