சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய பவுலர் சிடில் ஓய்வு
Views - 305 Likes - 0 Liked
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய பவுலர் சிடில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
2008-ம் ஆண்டு மொகாலியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சிடில் தனது முதல் விக்கெட்டாக சச்சின் தெண்டுல்கரை வீழ்த்தி இருந்தார். 2010-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டின் போது, தனது 26-வது பிறந்த நாளில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.இதுவரை 67 டெஸ்டுகளில் விளையாடி 221 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 20 ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் ஆடியிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், களம் காணும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாக சிடில் தெரிவித்தார்.News