உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: கோனெரு ஹம்பி 2-வது இடம்
Views - 103 Likes - 0 Liked
-
உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 2-வது இடம் பிடித்தார்.மாஸ்கோ,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து அங்கேயே நடக்கும் மற்றொரு துரித வகை போட்டியான உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். இதில் முதல் 5 ரவுண்டுகளில் வரிசையாக வெற்றி பெற்ற கோனெரு ஹம்பி, அடுத்த 2 சுற்றில் டிரா கண்டார். இதன் பின்னர் 8-வது ரவுண்டில் மோனிகா சாக்கோவை (போலந்து) வீழ்த்திய கோனெரு ஹம்பி, 9-வது ரவுண்டில் நடப்பு சாம்பியன் ரஷியாவின் கேத்ரினா லாக்னோவிடம் தோல்வியை தழுவினார். முதல் நாள் முடிவில் 7 புள்ளியுடன் ஹம்பி மூன்று வீராங்கனைகளுடன் இணைந்து 2-வது இடத்தை பகிர்ந்து இருந்தார். கேத்ரினா லாக்னோ 8 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.News