கன்னியாகுமரியில் கடல் அழகை ரசிக்க வசதியாக தடுப்பு சுவர் இடித்து அகற்றம்
Views - 338 Likes - 0 Liked
-
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிக்க வசதியாக கடற்கரை சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டது.கன்னியாகுமரி,
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்காணவர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் கடற்கரைக்கு வந்து சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பது வழக்கம். பின்னர், அந்த சாலையில் உள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றுக்கும் செல்வார்கள்.தடுப்பு சுவர் அகற்றம்
சீசன் காலங்களில் கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபம் முதல் காட்சிகோபுரம் வரை கடற்கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த சாலையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கடற்கரை சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டது.
அழகை ரசிக்கலாம்
மேலும், இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் கடற்கரை சாலையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள், கடல் அழகை கண்டு ரசிக்கலாம்.News