" Work hard, stay humble, and follow your heart."

நாகர்கோவில் – தாம்பரம்: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள்

Views - 119     Likes - 0     Liked


  • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    ரெயில் எண் 82609 தாம்பரம்- நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி3 டயர்4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, லக்கேஜ் கம்பிரேக் வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    ரெயில் எண் 06006 நாகர்கோவில்- திருச்சி சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14-ந்தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு திருச்சி சென்றையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 13, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் லக்கேஜ் கம் பிரேக்வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும திண்டுக்கல் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண். 82606 நாகர்கோவில்- தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 19-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்படுவது மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலில் ஏசி 2 டயர் 1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும். இந்த ரெயிலுக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் எண். 06075 தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ந்தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயிலில் ஏசி 2 டயர்1, ஏசி 3 டயர் 4, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகள் இடம் பெறும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    News