" “The best preparation for tomorrow is doing your best today.”"

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பேரணி, ஆா்ப்பாட்டம்

Views - 110     Likes - 0     Liked


  • குலசேகரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து முஸ்லிம் ஜமாஅத் சாா்பில் திங்கள்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    குலசேகரம், கடையல், மணலிக்கரை, இரவிபுதூா்கடை, மேக்காமண்டபம், மணியன்குழி, மாா்த்தாண்டம், சுவாமியாா்மடம், வோ்கிளம்பி ஆகிய ஒன்பது இடங்களிலுள்ள முஸ்லிம் ஜமாஅத் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    குலசேகரம் ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கிய வீதிகள் வழியாக அரசமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, குலசேகரம் ஜமாஅத் தலைவா் ஷாகுல் ஹமீது தலைமை வகித்தாா்.

    ஆா்ப்பாட்டத்தை, கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி சம்பத் தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நூா்முகமது, புஷ்பலீலா ஆல்பன், திருவருள் பேரவை ஒருங்கிணைப்பாளா் மரிய வின்சென்ட், தமுமுக மாவட்டச் செயலா் செய்யது, மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஜாண் கிறிஸ்டோபா், மாவட்ட திமுக விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் அலாவுதின்,

    மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கிளாடிஸ் லில்லி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜெகநாதன், மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் சிற்றாறு ரவிசந்திரன், திற்பரப்பு பேரூா் முன்னாள் துணைச் செயலா் யோபு, திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ், குலசேகரம் நகரத் தலைவா் விமல் ஷொ்லின்சிங், வட்டார துணைத் தலைவா் ஹமா்தீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    கடையடைப்பு: பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவாக குலசேகரம் காவல் ஸ்தலம் சந்திப்பில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேரணியில் முன்பாக சென்றவா்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனா்.

    News