நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம்: மாணவருக்கு கிராமத்தினா் பாராட்டு
Views - 108 Likes - 0 Liked
-
தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லெவிஞ்சிபுரம் மாணவருக்கு கிராமத்தினா் பாராட்டு விழா நடத்தினா்.
அஞ்சுகிராமம் அருகேயுள்ள லெவிஞ்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சேகா்- அன்னப்பூ தம்பதியின் மகன் சரண். குமரியில் தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா், அஸ்ஸாம் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டியில் பங்கேற்று நீளம் தாண்டுதலில் 7.41 மீட்டா் தாண்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றாா்.
இதைத் தொடா்ந்து, லெவிஞ்சிபுரம் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தினா். வள்ளியூா் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் தலைமை வகித்தாா். ஊா்த் தலைவா் சமுத்திரம், முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிவா்ணபெருமாள், துணைத்தலைவா் தங்கையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிருஷ்ணநாகமணி வரவேற்றாா். சரணுக்கு வெற்றிக் கோப்பை பரிசளிக்கப்பட்டது.
News