கலெக்டர் அலுவலகம் முன் உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Views - 81 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் அகஸ்தீஸ்வரம்– தோவாளை பகுதி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குளங்களில் மீன் வளர்த்து, அதனை பிடிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇதற்கு மாநில மீன்பிடி தொழிற்சங்க சி.ஐ.டி.யு. கூட்டமைப்பு தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து, இணை ஒருங்கிணைப்பாளர் வினோ உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநில பொதுச்செயலாளர் அந்தோணி, முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட உள்நாட்டு மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.News