குமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
Views - 270 Likes - 0 Liked
-
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.அதன்படி, கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சஜாக் ஆபரேஷன்‘ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.இதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான அதிநவீன ரோந்து படகில் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த படகில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டனர். மீனவர்களிடம் அடையாள அட்டை இருக்கிறதா? என சோதனையும் நடத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களில் 72 கிலோ மீட்டர் தூரம் ரோந்து பணி நடைபெற்றது. கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன வாகனம் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது.News