குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம்; பா.ஜனதாவினர் வீடு, வீடாக வழங்கினர்
Views - 312 Likes - 0 Liked
-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான கருத்துகள் மற்றும் பேரணியில் பங்கேற்க வேண்டியதின் நோக்கம் குறித்து பா.ஜனதா சார்பில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடந்தது.இதில் முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், பா.ஜனதா மாவட்ட பார்வையாளர் தேவ், துணைத்தலைவர் முத்துராமன், நிர்வாகிகள் ராஜன், உமாரதி ராஜன், ராகவன், அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் ஸ்டிக்கர்களும் வீடுகள் முன்பு ஒட்டப்பட்டன.
News