நாகர்கோவில் மாநகராட்சி சார்பில்தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி வினியோகம்
Views - 58 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.கொரோனா பாதிப்புகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம் மற்றும் தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்த பகுதிகளில் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் வெளியே செல்லவும், வெளி நபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.வாக்குவாதம்இதைத்தொடர்ந்து டென்னிசன் தெரு மற்றும் வெள்ளாடிச்சிவிளை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டென்னிசன் தெருவில் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும் அங்கு தடை இன்னும் நீக்கப்படாமல் தொடர்ந்து அமலில் இருக்கிறது.இதனால் அங்கு தடையை நீக்கும்படியும், அத்தியாவசிய பொருட்கள் ஏதும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று கூறியும் போலீசாருடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது.அரிசி வினியோகம்இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் பிரட் ஆகியவை நேற்று வீடு-வீடாக வழங்கப்பட்டன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5 கிலோ அரிசி வினியோகிக்கப்பட்டது. அந்த வகையில் டென்னிசன் தெரு மற்றும் வெள்ளாடிச்சிவிளை ஆகிய 2 பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 206 வீடுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. ஆனால் டென்னிசன் தெரு மக்களுக்கு மட்டும் பிரட் கொடுக்கப்பட்டது.வெள்ளாடிச்சிவிளையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரட் வழங்கப்பட உள்ளது.News