" “If opportunity doesn't knock, build a door.”"

பூதப்பாண்டி அருகேதோட்டத்திற்குள் புகுந்து யானை அட்டகாசம்தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன

Views - 281     Likes - 0     Liked


  • ஆரல்வாய்மொழி,
     
    பூதப்பாண்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்த யானை, தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
     
    இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
     
    கொரோனா ஊரடங்கு
     
    கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால், மலை பகுதிகளில் இருந்து விலங்குகள் ஊருக்குள் புகுந்து வரும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மேலும் கோடைவெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர், உணவை தேடியும் விலங்குகள் மலையடிவார பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டம் சீதப்பால் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
     
     
    தென்னை மரங்கள் சேதம்
     
    பூதப்பாண்டி வன சரகத்திற்கு உட்பட்ட சீதப்பாலில் இருந்து தெள்ளாந்தி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இந்த தோட்டத்தில் தென்னை, முந்திரி பழம், மா, பனை மரங்கள் உள்ளன. மேலும் தோட்டத்தில் சிறிய குட்டையும் உள்ளது.
     
    நேற்று அதிகாலை அந்த தோட்டத்தில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட, தோட்ட காவலாளிகள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, அங்கு சில தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தன. சில மரங்களில் தென்னம்பாலை ஒடிக்கப்பட்டு கிடந்தது.
     
    யானை அட்டகாசம்
     
    இதுகுறித்து ஆரல்வாய்மொழி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில், வனவர் பிரசன்னா, வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் ராஜ பாபு ஆகியோர் விரைந்து சென்றனர். தோட்டத்தில் பதிந்த கால் தடத்தை பார்த்து ஆய்வு செய்ததில், பெரிய யானை ஒன்று தனது குட்டியுடன் வந்து தோட்டத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், சிறிய குட்டையில் யானை தன்னுடைய குட்டியுடன் குளித்து மகிழ்ந்துள்ளது. தோட்டத்திற்குள் புகுந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    News