புதிதாக தாய்- மகன் உள்பட 3 பேருக்கு தொற்று உறுதி:குமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு
Views - 296 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,புதிதாக தாய்- மகன் உள்பட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. மேலும் பஸ்சில் வந்த நபருடன் பயணித்தவர்கள் விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறதுதாய்- மகன்குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது. அவர்களில் 21 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 23 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 5 வயது பெண் குழந்தை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் தாயும், மகனும் ஆவர். இவர்களது சொந்த ஊர் சூரங்குடி அருகில் உள்ள திக்கிலான்விளை ஆகும். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.கொரோனா கண்டுபிடிப்புஅவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அழைத்து வந்து கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கடந்த 10-ந் தேதி சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களில் தென்மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆம்னி பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சென்னையில் பரிசோதனைக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருந்தன.பஸ்சில் வந்தவர்அதில் ஒரு ஆம்னி பஸ் குமரி மாவட்டத்தை நெருங்கும்போது அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடன் குமரி மாவட்டம் குலசேகரம், ஆசாரிபள்ளம் பகுதிகளைச் சேர்ந்த 24 வயது மற்றும் 26 வயது மதிப்புள்ள 2 வாலிபர்களும் உடன் வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பஸ் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி வந்ததும் பஸ்சை நிறுத்தி மேற்கண்ட 3 வாலிபர்களையும் இறக்கிவிட்டு, பஸ்சை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பத்மநாபபுரத்தைச் சேர்ந்த வாலிபரை கொரோனா சிகிச்சை வார்டிலும், மற்ற 2 பேரையும் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு வார்டிலும் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.50 ஆக உயர்வுகொரோனா தொற்று உள்ளவருடன் பயணித்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனால் குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்று கண்டறியப்பட்ட குமரிக்கு பஸ்சில் வந்தவருடன் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யார்- யார்? பயணம் செய்தார்கள் என்பது பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்News