" “If opportunity doesn't knock, build a door.”"

நாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் –

Views - 301     Likes - 0     Liked


  • கடந்த வாரம் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நாகர்கோவில் பகுதிகளில் செயல்பட்டுவந்த தள்ளுவண்டி கடைகள் அனைத்தையும் மூட செய்தனர். இதனால் பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் உள்ளது. குறிப்பாக நடைபாதைகளில் வைக்கப்படும் தள்ளுவண்டிகளை அதிகாரிகள் அகற்றுவதை பொதுமக்கள் பாராட்டுகின்ற்றனர். ஆனால் போக்குவரத்திற்கு எந்த வித இடைஞ்சலும் இல்லமால் ஆள் நடமாட்டம் பெரிய அளவில் இல்லாத பகுதிகளில் செயல்படும் தள்ளுக்காண்டிகளையும் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். இதில் பலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலம் வழங்கியுள்ள அடையாள அட்டை வைத்துள்ளனர். இதில் பல குடும்பங்கள் வாடகைக்கு கடை எடுக்க வழியில்லாமல் ரோட்டு ஓரத்தில் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். தற்போதைய இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண பணியாளர்களுக்கே வேலையில்லாத நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ஒரு வாரத்தை கடந்து தள்ளுவண்டி திறக்கப்படாததால் இவர்களில் பலரும் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றிற்கு முன்பே நாகர்கோவில் நகராட்சி பூங்காவிற்கு பின்புறம் இடம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் கடை நடத்துவதும் நடத்தாமல் இருப்பதும் ஒன்றே, எந்த வருமானமும் வராது என கூறுகின்றனர் தள்ளுவண்டிகாரர்கள். எனவே போக்குவரத்திற்கு பாதிப்பில்லாமல், சமூக இடைவெளியையும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி தற்போதைய வேலைவாய்ப்பு சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவர்களின் பசியை போக்க மாநகராட்சி தகுந்த பாதுகாப்புடன் தள்ளுவண்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

    News