நகை மதிப்பீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் மனு
Views - 315 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் மனு கொடுத்தனர்.நகை மதிப்பீட்டாளர்கள்குமரி மாவட்ட கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர் சங்க தலைவர் தங்கமோகனன் மற்றும் நிர்வாகிகள் குணசீலபதி, அந்தோணி, சிதம்பரநாதன் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவதுஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளால் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலத்தில் அத்தியாவசிய பண பரிமாற்றத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமலும், மாத ஊதியம் இல்லாமலும், இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் நகை மதிப்பீட்டு கட்டணம் இல்லாமலும் பணியாற்றி வருகிறார்கள்.நிவாரணம்இவர்கள் அனைவருக்கும் போதிய வருமானம் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாத்துக்கொள்ள உணவிற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரண தொகையாகவும், தினமும் வங்கிப்பணிக்கு வந்து செல்வதற்கு இதர மாவட்டங்களில் வழங்குவது போல ரூ.300 படியாக வழங்க கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News