ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல் இலவச முக கவசங்கள்
Views - 304 Likes - 0 Liked
-
சென்னை,
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க அரசு செய்துள்ளது. அதன்படி, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர்களுக்கு தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட உள்ளது. அவை, மறு பயன்பாடு செய்யக் கூடிய துணி முக கவசங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுமுதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலவச முக கவசங்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைக்க உள்ளார்News