புதிய கல்விக்கொள்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Views - 263 Likes - 0 Liked
-
சென்னை,
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், "கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது" கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
ஆலோசனையை தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதியகல்விக்கொள்கையை நிராகரிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.News