நாகர்கோவில் அருகே கோவில் உண்டியல் உடைத்து ரூ .20 ஆயிரம் திருட்டு
Views - 66 Likes - 0 Liked
-
நாகர்கோவில் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 20 ஆயிரத்தை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது ,
நாகர்கோவில் கோட்டார் அருகே கணேசபுரத்தில் சாந்தான்செட்டிவிளை சுமைதாங்கி இசக்கியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு யாரோ ஆடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக கோவில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது
News