"சென்னையில் கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் டோக்கன்" - புதிய முறையை அறிமுகப்படுத்தியது அறநிலையத்துறை
Views - 277 Likes - 0 Liked
-
சென்னை,கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி தினமும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக கோவிலில் பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.இதையடுத்து தமிழக அரசு இந்த மாதம் (செப்டம்பர்) ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க உத்தரவிட்டு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதனையடுத்து ஏராளமானோர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தனர்.இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரதான கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய ஆன் லைன் மூலம் டோக்கன் முறையை இந்து அறநிலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சென்னை வடபழனி முருகன் கோயில், கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஆகிய மூன்று கோயிலில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, டோக்கன் பெற்று வர வேண்டும் என்று அறநிலைத்துறை அறிவுறித்தியுள்ளது.News