கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கல்வி கட்டணத்தை பள்ளிகள் கோரினால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தற்போது அரசால் செயல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கல்வி கட்டணம் கோரப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நூறு சதவீத கல்வி கட்டணம் கோரும் பள்ளிகளின் மீதுநடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த தீர்ப்பை மீறி ஒரு சில பள்ளிகள் 100 சதவீத கல்வி கட்டணம் கோருவதாக தெரிய வருகிறது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் தீர்ப்பை மீறி 100% கல்விக் கட்டணத்தை பள்ளிகள் கோரினால் அந்தப் பள்ளிகள் மீதான புகாரினை ceokkmfees@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது சரியான வீட்டு முகவரியைக் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தெரிவித்துள்ளார்.