நாகர்கோவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் மூலம் தேர்வு செய்து வருகின்றனர். கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட வக்கீல் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது.
நாகர்கோவில் வக்கீல் சங்க தேர்தல் நடந்து வருகிறது. இதில் தலைவர் பதவிக்கு மரிய ஸ்டீபன், சிதம்பர தாணுபிள்ளை ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவிக்கு பிரதாப், ரேகா, ராம்தாஸ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச்செயலாளர், நூலகர், நிர்வாக உறுப்பினர்கள் என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிகாரியாக செல்வகுமார் செயல்பட்டு அவர் முன்னிலையில் தேர்தல் நடந்து வருகிறது. நாகர்கோவில் வக்கீல் சங்க உறுப்பினர்களாக மொத்தம் 1020 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.