கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல்
Views - 30 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வருடம் தோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2020 ம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் விருது, வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ 10 ஆயிரம் பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினர். விழாவில் நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், ஹரிகரன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்
News