" “If opportunity doesn't knock, build a door.”"

கறிக்கோழி விலை ஏற்றம் ஏறி இறங்கும் விற்பனை..

Views - 250     Likes - 0     Liked


  • குமரி மாவட்டத்தில் கறி கோழிகளின் விலை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருவதால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட மாமிச கடைகளுக்கு சவாலாக கறிக்கோழி கடைகள் உள்ளன. குறிப்பாக பன்றி கறி கடைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே உண்டு. ஆடு,மாடு மாமிச கடைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே செயல்படும். ஹோட்டல்களுக்கு மாமிசங்கள் தேவைப்படுவதால் 10 சதவீத கடைகள் நாள்தோறும் திறக்கும் இதே நிலையில் தான் கறிக்கோழி கடைகள் செயல்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், அருமநல்லூர், சுருளகோடு, பொன்மனை, குலசேகரம், திருவட்டார் ,திற்பரப்பு, பெருஞ்சாணி, கோதையார், சாமியார்மடம், இரவிபுதூர்கடை, முட்டைகாடு, பள்ளியாடி, முருங்கவிளை, செம்பொன்விளை, அம்மாண்டிவிளை, ஆலங்கோடு, மணவாளக்குறிச்சி உட்பட இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன‌. இந்த கடைகளின் வழி பண்ணை முதலாளி, கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் 24 ம் தேதி முதல் கறிக்கோழிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. தொடர்ந்து 40 நாட்கள் இந்நிலை நீடிக்க தொடர்ந்து கடைகளில் விலை உயர ஆரம்பித்தது. ஆனால் பண்ணை கோழிகளுக்கு கொடுக்கும் மருந்து மற்றும் தானியம் விலையேறவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு தளர்வுக்குப்பின் ஒரு கிலோ கறி கோழி விலை கடைகளில் ரூபாய் 160 வரை விற்கப்பட்டது. தற்போது கடந்த 3 வாரங்களாக கறிக்கோழி விலை எகிறியுள்ளது. குறிப்பாக வாரத்திற்கு வாரம் கடைகள் தோறும் வித்தியாசமான விலையில் விற்பனையாகிறது. தற்போது நாமக்கல்லிருந்து வரும் கறிக்கோழிகள் எந்தவித தடையும் இல்லாமல் வருகிறது. உணவு, தானிய விலை ஏற வில்லை. ஆனால் கறிக்கோழிகள் விலை நாளுக்கு நாள் வித்தியாசமாக உள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகச் சிரமத்துடன் வாங்கி சென்றாலும் பழைய படிவியாபாரம் கடைகளில் ஏறி இறங்கி வருகிறது தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆடு மாடு மாமிச கடைகளிலும் விற்பனை நிலவரம் அடிக்கடி மாறி வருவதால் விற்பனை சகஜ நிலைக்கு வரும் என வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

    News