மருந்து கோட்டையில் மலைப்பாம்பு வனத் துறையினர் மீட்பு
Views - 38 Likes - 0 Liked
-
மருந்துக்கோட்டையில் இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கில் பணிசெய்த பணியாளர்களை அச்சுறுத்திய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கழிவு பொருட்கள் கிட்டங்கி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் தொழில் கூடம் ஆகியவை மருந்து கோட்டையில் உள்ளன. இதனால் என்னேரமும் இந்த பகுதிக்கு சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், உரம் தயாரிப்பவர்கள் வந்து செல்வது வழக்கமாகும். இயற்கை உரம் தயாரிக்கும் தொழில் கூடத்தில் 15 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையின் போது மலைப்பாம்பு ஒன்று அங்கு வந்து மக்களை பயமுறுத்தி வந்தது. இந்த பாம்பு குறித்த விஷயத்தை அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இதனடிப்படையில் ஆணையாளர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடம் வந்த வனத்துறையினர், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் அந்த மலைப்பாம்பை சுமார் அரை மணி நேரம் பாடுபட்டு மக்களை அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பினை பிடித்தனர். பிடிப்பட்ட மலைப் பாம்பின் நீளம் சுமார் 10 அடி இருக்கும். பொதுமக்கள் மற்றும் உரம் தயாரிக்கும் பணியாளர்களை அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News