திருட்டு போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
Views - 251 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்ததாக மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தவிர பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3 கஞ்சா வியாபாரிகள் 5 ரவுடிகள் என 8 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு அவர்களது தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காவலர்களில் எண்ணுக்கோ அல்லது 100 க்கோ அழைத்தால் போலீசார் உதவி உடனடியாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்
News