கன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்
Views - 54 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் நடந்தது .
மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் சஜாக்ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார், கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியை அதி நவீன ரோந்து படகில் சென்று பைனாக்குலர்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் அடையாள அட்டையை சோதனையிட்ட போலீஸார் சந்தேகப்படும்படியாக ஏதாவது படகுகள், கப்பல்கள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறினர். மேலும் கடலோர சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், பஞ்சலிங்கபுரம் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான 11 சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனத்தையும் போலீஸார் சோதனை செய்த பின்புதான் அனுப்பினர். மணலில் ஓடும் அதி நவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.
News