இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,40,705 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை : மாநில அளவிலான பாதிப்பில் தமிழகம் 4ம் இடம்!!
Views - 282 Likes - 0 Liked
-
புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 98 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 86,821 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,12,585 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,181 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 85,376 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 52,73,202 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,40,705 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 83.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.56% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 14.90% ஆக குறைந்துள்ளது.
* இந்தியாவில் ஒரே நாளில் 14,23,052 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 7,56,19,781 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :259462; குணமடைந்தோர் : 1088322; இறப்பு : 36662
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :46263; குணமடைந்தோர் : 541819 ; இறப்பு : 9520
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 26908 ; குணமடைந்தோர் : 247446 ; இறப்பு : 5361
கேரளா : சிகிச்சை பெறுவோர் :67140 ; குணமடைந்தோர் : 128224 ; இறப்பு : 742
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 107635; குணமடைந்தோர் :485268 ; இறப்பு : 8864
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :58445; குணமடைந்தோர் : 629211 ; இறப்பு : 5828News